இறைவன் அநாதி என்பது போல உயிர்களும் அநாதி என்பது சித்தாந்தக் கொள்கை.அதேபோல ஆன்மீகம் தோன்றிய காலத்திலேயே நாத்திகமும் இருந்திருக்க வேண்டும். இறைவனது திருவுள்ளமும் ஒருவேளை அதுபோல இருக்கலாம்." நாத் தழும்பு ஏற நாத்திகம் பேசினர் " எனக் கூறும் மாணிக்கவாசகரே , உயிர்கள் பலவடிவெடுத்து உழன்ற பின்னர் வினை நீக்கம் வரும் காலத்தில் " தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி " அவனருளால் தூய்மை செய்யப்படுவதை விளக்குகிறார். நமக்கு அதிகமாகத் தெரிந்ததெல்லாம் நாம் வாழும் காலத்தில் ஆன்மீகமும் நாத்திகமும் எப்படி உள்ளன என்று அறிய முடிந்ததே ஆகும்.
நாஸ்தி என்பதற்கு இல்லை என்று பொருள் சொல்வார்கள். இறைவன் இல்லவே இல்லை என்றும் அவன் கற்பிக்கப்பட்டவன் என்றும் வாதிடும் நாத்திகர்களை இன்றும் பார்க்கிறோம். சிலரோ நாத்திகத்தை வாய் விட்டுப் பேசாமல் ஆத்திகத்தையும் ஆதரிக்காமல் கடவுட் கொள்கையில் ஏதும் தெரியாமலும் காலத்தைக் கழிக்கிறார்கள். அவர்களும் ஒருவகையில் நாத்திகர்களே.
நம் தேசத்து ஆன்மீகத்திற்கும் பிற நாடுகளின் ஆன்மீகத்திற்கும் வேறுபாடு உண்டு.நம் நாட்டிலுள்ளோர் பிறரது நம்பிக்கையைப் புண்படுத்தாமல், பிறரது கொள்கையைப் பழிக்காமலும் இருப்பவர்கள். ஆனால் அயலவர்களோ நமது கொள்கையை ஏற்காததோடு அவர்களது கொள்கையைப் பிறருக்கும் புகுத்தி அவர்கள் பால் ஈர்ப்பதில் வல்லவர்கள். எந்தக் கொள்கையையும் அறியாதவர்கள் அவர்களது ஆசை வார்த்தைகளில் மயங்கி அம்மாயையில் வீழ்ந்து விடுகிறார்கள். சமீப காலமாக அவர்களால் தரப்படும் அனுகூலங்களுக்கு ஆசைப்பட்டு நம் சமயத்தை ஏசவும் துவங்கி விட்டனர்.
சமூக வலைத் தளங்கள் மூலம் ஆன்மீகமும் நாத்திகமும் பரப்பப்படுவதைப் பலரும் அறிவர். யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் அவற்றின் மூலம் பேசத் தொடங்கி விடுகின்றனர்.நமது புராணங்களும் தோத்திர நூலகளும் பழிக்கப்படுகின்றன. ஒற்றுமையாக இதனை எதிர்த்துக் குரல் கொடுப்போர் மிகக் குறைவாக இருப்பதால் நாத்திகர் கை ஓங்குகிறது. அனுகூலங்களால் ஆன்மிகர்களும் கவரப்பட்டு நமது தெய்வங்களைப் பழித்தும் மாறுபடுத்திப் பேசியும் வருகின்றனர்.
சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பேசியிருக்கிறார். எப்படித்தான் அவரது சிந்தையில் இப்படிப்பட்ட கருத்துக்கள் உதயமாகின்றதோ நாம் அறியோம். ஏதும் அறியாத நடு நிலையாளர்களுக்கு இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகவே தோன்றுகிறது. இல்லாவிட்டால் அவர் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்க முடியுமா ? இக்கண்டுபிடிப்பு நாத்திகர்களுக்கு அல்வா கொடுத்த மாதிரி..
முதலில் அவர் இதைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டார் என்று பார்ப்போம். முருகன் தமிழ்க் கடவுள் என்பதால் சுப்ரமணியன் என்ற பெயர் இருக்க நியாயமில்லையாம். பண்டைத் தமிழ் நூல்களில் அப்பெயர் காணப்பட வில்லையாம். பிற்காலத்தில் இவ் வடமொழிப் பெயர் புகுத்தப்பட்டதாம் ! நாம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கம் கடல் சீற்றத்தால் அழிந்தபோது ஏராளமான தமிழ் நூல்கள் அழிந்ததாகவும். கவிராயர் பலரது வீடுகளிலிருந்து பழைய ஓலைச் சுவடிகள் ஆற்றில் எறியப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. அப்படியாயின் அவற்றில் சுப்ரமணியன் என்ற பெயர் இடம்பெற்ற நூல் மறைந்திருக்கலாம் அல்லவா ?
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நூல் ஒன்றில் சுப்ரமணியன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டினால் இவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் சேந்தனார் என்பவர் அருளிய பதிகம் ஒன்று உள்ளது. திருவிடைக்கழி என்ற தலத்திலுள்ள முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற பதிகம் அது. அதில் வரும் ஒரு பாடலில் " சுப்பிரமணியன் " என்று முருகப் பெருமான் குறிப்பிடப்பெறுகிறார்.அதே பதிகத்தில் வேறோர் பாடலில் " சுவாமி " என்ற வட மொழிப் பெயரும் காணப்படுகிறது. அமர சிம்மன் என்ற ஜைனன் வடமொழியிலியற்றிய அமர கோசம் என்ற அகராதியில் சுவாமி என்ற சொல்லுக்குப் பொருள் முருகக் கடவுளையே குறிப்பதாகக் காணப்படுகிறது. இதனால் சுவாமி என்றாலும் சுப்ரமணியன் என்றாலும் முருகனைக் குறிப்பதாகக் கூறும் இத் தமிழ் நூலைக் காட்டிலும் வேறு ஆதாரம் என்ன வேண்டும் ?
அதே பதிகத்தில் தூய தமிழ்ச் சொற்களாலும் கந்தப்பெருமான் காட்டப்படுகிறார். அவையாவன: " மலையான் மதலை " குமர வேள் ", வள்ளி மணாளன் " " நங்கை யானைக்கும் குழகன் " , " வேலுலாம் தடக்கை வேந்தன் " வேற் செல்வன் ", " பன்னிரு நயனத்து அறுமுகத்து அமுது " , " கிரி தனைக் கீண்ட ஆண்டகை" , "தொகை மிகு நாமத்தவன் " " சூர் மார்பினைத் தடிந்தோன் " என்பவை அவற்றுள் சிலவாம்.
தமிழ் முருகன் என்று பிரித்தும் திரித்தும் கூறும் அச் சொற்பொழிவாளர் அம்முருகனது தாய் தந்தையர் யார் என விளக்குவாரா? சுப்ரமண்யனை வட நாட்டவராகக் கூறினால் அப்பெருமானின் பெற்றோர் சிவ பார்வதி ஆகி விடுவர். அப்படியானால் தமிழ் முருகனின் பெற்றோர் யார் ? அறிவீனத்தின் உச்சம் தொடப்படுகிறது. ஆனால் திருவிடைக்கழி முருகனது உறவினர் யார் என்று சேந்தனார் அடையாளம் காட்டும் அழகைப் பாருங்கள் : " புரம் பொடி படுத்த மலை வில்லி தன் புதல்வன் " ( திரிபுரம் எரி செய்த அச்சிவனது குமாரன் ), " மலை மகள் மதலை", " கங்கை தன் சிறுவன் " " மான் அமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளை " ( கையில் மான் ஏந்திய சிவபிரானது பிள்ளை); " " இளம் பிறைச் செஞ்சடை அரன் மதலை" ( பிறைச் சந்திரனை சிவந்த சடையில் ஏற்ற சிவபெருமானின் மகன்); " கணபதி பின் இளம் கிளை " ( கணபதிக்குப் பின் தோன்றியவன் ) ; என்ற சொற்களால் திருவிடைக்கழி முருகனும் திருக்கயிலாயத்து சுப்ரமண்யனும் ஒருவரே என்று சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி சேந்தனார் பாடி அருளியுள்ளார்.
இறைவன் எல்லா மொழியாலும் வணங்கப்படுபவன். " தாய் மொழியாகத் தூய் மொழி அமரர் கோ மகனை " என்ற சொற்றொடர் இதனைச் சுட்டிக் காட்டுகிறது. " தொகை மிகு நாமத்தவன் " என்பதால் அளப்பரிய ஆற்றல் உடைய ( " அசிந்த சக்தயே நம: என்றே சுப்பிரமணிய ஸஹஸ்ரநாமம் துவங்குகிறது). பரம்பொருளை ஒரு குறுகிய வட்டத்தில் அடக்குவதா? இதுதான் சொற்பொழிவாளருக்கு அழகா ?
தமிழ் நாட்டில் இருப்பதுபோல வடநாட்டில் முருகன் வள்ளி தேவசேனை சமேதராக இல்லையாம் . அதனால் என்ன ? வடநாட்டில் பிள்ளையார் சித்தி புத்தி சமேதராக இருப்பதுபோல் தமிழகத்தில் இல்லையே ! அதனால் தமிழ்ப் பிள்ளையார் வேறு வட நாட்டுப் பிள்ளையார் வேறு என்பாரா ? அங்கு முருகன் பிரம்மச்சரியக் கோலத்தில் வழிபடப் படுவதால் தேவிகளின் திருவுருவங்கள் அமைக்கப்படவில்லை.ஆறுமுகமும் மயிலும் கூடவே இருக்கும் மூர்த்தங்கள் பல அங்கும் உண்டு. . வடமொழி அஷ்டோத்திரத்தில் தேவிமார் பெயர்கள் இல்லையே என்கிறார் . எதையும் யோசித்து விட்டுப் பேச வேண்டும். தமிழகக் கோயில்களில் செய்யப்படும் அர்ச்சனைகள் வட மொழியில் உள்ள புராணங்கள் வாயிலாக அமைந்தவை ஆதலால் அவ்வாறு உள்ளன என்பதில் வியப்பேதும் இல்லை. அதனால் தெய்வம் வேறாகி விடாது.
இவரது நோக்கம் தான் என்ன? சமயத்தைக் கிண்டலாகப் பேசுவதா? அல்லது வடக்கு தெற்கு என்று பிரிவினையை உண்டு பண்ணுவதா ? ஒரே பாலமாகத் திகழும் வட மொழியைக் கோயில்களிலிருந்து விரட்டுவதா அல்லது கிரியைகளுக்கு மட்டுமே வட மொழியைப் பயன் படுத்திக்கொண்டு வாழ் நாள் முழுதும் தமிழைத் தவிரப் பிற மொழிகளை அறியாத ஏழை அந்தணர்களைக் கோயில்களிலிருந்து விரட்டுவதா ? அவர்கள் செய்த பாவம் தான் என்ன ? நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும்.
இவரை விடுங்கள். ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் மௌனிகளாக இருப்பது ஏன்?
" பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் " என்பது திருமுறை வாக்கு. எல்லோரையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.ஞாபகம் இருக்கட்டும்.

பழந்தமிழகத்தில் எல்லாச் சமயத்தினரும் வடமொழியிலும் வல்லவராக இருந்திருக்கின்றனர் என்னும் கூற்றுக்குச் சான்று ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரே காலத்தில் இரண்டு மொழிகளையும் பயன்படுத்தியும் வந்ததால், முருகப்பெருமானைப் பற்றி பாரதத்தின் பல்வேறு தலங்களில் பல்வகையான அனுபவங்களை அவன் அடியார்க்கு அளித்ததும், அதனால் வெவ்வேறு விதங்களில் அவ்வேள் உருவகப்படுத்தி வழிபட்டு வருவதையும், நாடெங்கும் சஞ்சரித்து வந்த யாத்திரிகர்கள் மூலம் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். நாகசாமியாகக் கன்னடியரிடமிருந்தும் கார்த்திகேயப் பிரம்மசாரியாக மராத்தியரிடமிருந்தும் சுப்பிரமணியன் என்று கந்தபுராணவாயிலாகவும், சங்ககாலத்துத் தமிழ் மரபிலிருந்து வள்ளி தேவானை மணாளனாகவும் மன அரங்குகளில் அரசோச்சி வருகிறான் அறுப்டைவீட்டு மன்னவன்.
ReplyDelete