நம்மில் இன்னும் பலருக்கு சுதந்திரம் என்பதன் உண்மையான பொருள் புரியவில்லை எனத் தோன்றுகிறது. தனது இஷ்டப்படி வாழ்வதும், பேசுவதும்,எழுதுவதுமே சுதந்திரம் என்று நினைக்கிறார்கள். பிறரது இடையூறு இல்லாமலும்,பிறருக்கு இடையூறு விளைவிக்காமலும் வாழ்வதே அர்த்தமுள்ள சுதந்திரம். தனது கருத்தைப் பிறருக்குப் பக்குவமாகவும், புண்படாத வகையிலும், சொல்லாலும், எழுத்தாலும் தெரிவிப்பதில் தவறு இல்லை. நானே உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளட்டும். மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்வதற்கு சுதந்திரம் உண்டு என்று வாதம் இடுவதும் அதற்குப் பரிந்துகொண்டு அவர்களைச் சேர்ந்தவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவதும் நியாயம் ஆகாது. உரிமை உண்டு என்று சாதிக்கிறார்கள்! உரிமை என்ற பெயரில் பிறரைக் காயப்படுத்திவிட்டு , அதையே தமது வருமானத்தைப் பெருக்கும் வழியாகவும் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களுக்கு என்ன சொல்வது ?
இதற்கிடையில், சமயங்களுக்கிடையில் கருத்து வேற்றுமை, பனிப்போர் ஆகியவை சுதந்திரம் என்ற போர்வையில் செயல் படுகின்றன. எனது தாயே உயர்ந்தவள், எனது தாய் மொழி உயர்ந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பிறரது தாயையும் தாய்மொழியையும் பழித்துரைக்க ஏது உரிமை? அதேபோல் நான் வணங்கும் தெய்வம் உயர்ந்தது என்று சொல்வது நம்பிக்கையைப் பறை சாற்றுவது. அக்கருத்தை ஏற்கும் மக்களிடையே சொல்வதிலும் தவறு இல்லை. அவரவரது சமயப்பத்திரிகையிலும் எழுதிக் கொள்ளட்டும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான மேடையிலோ , பத்திரிகையிலோ, பல்வேறு சமயத்தவரும் காணும் தொலைக் காட்சியிலும் பிறருக்கு வேதனை அளிக்கும் தகவல்கள் பரிமாறப்பட வேண்டியதில்லை.
அரசாங்கமே ஏற்று நடத்தும் பல்வேறு துறைகளிலும் இக்கொள்கை பின்பற்றப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து சமயத்தின் பல்வேறு உட்பிரிவுகளுக்கு உட்பட்டு அனைத்துப் பிரிவினரையும் அரவணை ப்பதாகச் செயல் பட வேண்டும். இத்துறை, பல்லாண்டுகளாகத் " திருக்கோயில் " என்ற மாதாந்திர வெளியீட்டை வெளியிட்டு வருகிறது. இதன் மார்ச் மாத இதழின் ஏழாம் பக்கத்தில் 18 புராணங்களின் பெயர்களை சாத்வீக, ராஜஸ , தாமஸ புராணங்களாகப் பிரித்துக் காட்டி, அதில் சிவபுராணங்களைத் தாமஸ புராணங்கள் என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அறநிலையத்துறை ஆணையருக்குக் குடந்தை உழவாரப் பணிக் குழுவினர் கடிதம் எழுதியுள்ளார்கள். தேவை இல்லாத இந்த சர்ச்சையை வெளியிட்டுள்ள திருக்கோயில் ஆசிரியர் தான் விளக்கம் தர வேண்டும். தனது சொந்த விருப்பு வெறுப்புகளைக் காட்டிக் கொள்ளும் இடம் இது அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து அடுத்த இதழில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இந்த நிலைமை செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் இடம் பெறுவது வருந்தத் தக்கது. பிறர் எள்ளி நகையாடும்படி இவை துணை செய்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எதுவானாலும் நமக்குள்ளேயே இருக்க வேண்டும். நமது சமயத்தைச் சேர்ந்த நம்பிக்கை அற்ற பிறவிகளுக்கும் இது பெரு விருந்தாக அமைந்துவிடுவதைக் கருத்தில் கொண்டு செயல் படுவது நல்லது. தாங்களே மேதாவிகள் என்று எண்ணிப் பிறரை எள்ளி நகையாடும் இந்தக் கூட்டங்கள் திருந்தப்போவதில்லை. அவர்கள் நம்பிக்கை அற்றவர்களாகவே இருந்து விட்டுப் போகட்டும். எந்த சமயத்தில் தான் இந்த நிலை இல்லை? பிறரை ஏளனம் செய்ய இவர்களுக்குத் தகுதியோ உரிமையோ இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்வார்களாக. முடிந்தால் ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொள்ளட்டும். இல்லையேல் வாயை மூடிக் கொண்டு தமது வேலையைப் பார்ப்பது அவர்களுக்கும் பிறருக்கும் நல்லது. சர்ச்சைகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் இது என்பதை இனியாவது உணருவார்களா?

Well said .
ReplyDeleteWell said .
ReplyDeleteThis is long propagated by some of the fanatics who call themselves as 'Vaishnavas', totally opposite to the spirit of being Vaishnava.
ReplyDeleteYou ask them a question, they proudly claim that Veda Vyasa himself compiled these and classified them.
Well, we do not have any quarrel with Vyasa Maharishi for he himself gave Rudra Hrudaya Upanishad.
The other "sect" is International Society of Krishna Unconsciousness. They don't even spare Vishnu and call Him "an extension of Krishna". Seriously, turn away from this sect if you happen to see them in book stalls or in public places. Dare tell them that Krishna worshipped Lord Shiva, their furious nature will then be revealed. They're keep yelling 'Vaishanavanam Yatha Shambhu" for decades now.
There is a famous saying in Tamil, "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" - which is promptly reused by The Buddha as "Who knows, doesn't speak, who speaks, doesn't know".