Tuesday, March 20, 2012

ஆலயத்திற்கு வந்துள்ள ஆபத்து

              விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய் விரி
              பண்ணமர்ந்து  ஒலி சேர் புறவார் பனங்காட்டூர்ப்
              பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடைக்
              கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே.
                                                                                --திருஞானசம்பந்தர் தேவாரம்

              தன்னிடம் அடைக்கலமாக வந்த புறாவுக்காகத் தன் சதையையே அறுத்துத் தராசில் இட்ட சிபிச் சக்கரவர்த்தியின் கதை எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு போட்டாலும் தராசு நேராக நிற்காததால் தனது கண்ணையே பறித்து இட முற்படும்போது, பரமேச்வரன் பிரத்யக்ஷமாகி அவனுக்கு அருளிய ஊருக்குப்  புறவார் பனங்காட்டூர் என்று பெயர் வந்தது. அதனால் சுவாமிக்கும் நேத்திரோத் தாரகேச்வரர் என்று பெயர். சூரியன் இங்கு பூஜித்ததால் அவனது கதிர்கள், சித்தரை முதல் நாள் துவங்கி ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சுவாமியின் மீதும் பிறகு சத்தியாம்பிகையின் மீதும் விழுகின்றன. ஊரே பனங்காடாக இருந்ததால் பனங்காட்டூர் எனப்பட்டது. கோயிலுக்குள் ஸ்தல விருக்ஷமாக இரண்டு பனைமரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். தற்போது இவ்வூர்,பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இது, நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தரின் ஒரு பதிகம் இதற்கு உண்டு. ஒவ்வொரு பாடலும், "அருளாயே" என்று முடியும்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசீய நெடுஞ்சாலையிலிருந்து  முண்டியம்பாக்கம் அருகில், பண்ருட்டி செல்லும் சாலை பிரிகிறது. திருச்சி செல்லும் சாலையைப்போலவே இதையும் நால்  வழிச் சாலையாக மாற்றுவதற்கு தேசீய நெடுஞ்சாலைத்துறை முன்வந்துள்ளது. குண்டும் குழியுமாக இருந்த இந்தச் சாலைக்கு ஒரு வழியாக விமோசனம் வந்தது என்று ஆறுதல் அடையும்போது, கூடவே ஒரு அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. இந்தச் சாலை, பனையபுரம் வழியாகச் செல்வதால், அங்குள்ள பாடல் பெற்றதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதுமான பனங் காட்டீசனின்  கோயிலை இடிக்க முன்வந்துள்ளது தேசீய நெடுஞ்சாலைத் துறை. இத்தகவல், செய்தித்தாள்களில் வெளி வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இத்தகவல், மார்ச் முப்பதாம் தேதியிட்ட குமுதம் ஜோதிடம் இதழில் வெளிவந்துள்ளதை அன்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டவுடன், துக்கமும் அதிர்ச்சியும் மேலிட்டது. நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டாகி விட்டது. அதற்கு மேல் என்ன செய்யலாம்? சுவாமி பார்த்துக்கொள்வார் என்று, சிவனே என்று இருந்து விடலாமா? பூஜை முடிவில் அந்த ஊர்ப் பதிகத்தையும் பாராயணம் செய்தாகிவிட்டது. மனதில் சலனம் இன்னமும் நிற்கவில்லை.   நேரில் சென்று ஸ்வாமியிடமே ப்ரார்த்தித்துக்கொண்டு வரலாமா?

இணைய தளத்தின் மூலம் நேஷனல் ஹைவேய்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா வில் எதிர்ப்பைப் பதிவு செய்து, இம்முடிவை உடனடியாகத் தள்ளுபடி செய்து, வேறு வழியாக, கோவிலைப் பாதிக்காத படி, மாற்றுப்பாதை அமைக்க விண்ணப்பித்துள்ளேன். இதேபோன்று அந்த இணைய தளத்தில் ஏராளமானோர் எதிர்ப்பைப் பதிவுசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசின் இந்து அற  நிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள கோயில் இது. எனவே, அறநிலையத்துறை கமிஷனருக்கும் தந்தி கொடுக்கும்படி, திரு ஏ எம் ஆர் அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருக்கிறார்கள். அந்த கிராமத்து மக்களும் ஒன்று திரண்டு இவ்வாறு இடிப்பதை எதிர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.

சமய உலகம் ஒன்று படவேண்டிய தருணம் இது. ஏதோ ஒரு கிராமத்துக் கோயில் தானே என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டியபோது , திருவெண்பாக்கம் என்ற பாடல் பெற்ற சிவாலயத்தை இடித்தார்கள். லோயர் அணைக்கட்டு கட்டக் கருங்கல் தேவைப் பட்டபோது, கங்கைகொண்ட சோழபுரக் கோயிலின் கோபுரத்தை இடித்து அக்கற்களைப் பயன் படுத்தினர் என்பர். நாம் மௌனிகளாக இருக்கும் வரையில் இப்படித்தான் ஒவ்வொரு கோயிலாக இழக்க நேரிடும். இதே, வேற்று மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தால் இடிக்கும் துணிவு அரசாங்கத்திற்கு உண்டா?

மதத்தின் காவலர்களாகக் கருதப்படும் மடாதிபதிகள் இச்செயலைக் கண்டிப்பதோடு, இதற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஆன்மீகப் பற்றுள்ள வழக்கறிஞர்கள் இதற்கு ஆவன செய்ய முன்வரவேண்டும். இவ்வளவு ஏன்? அரசியலிலேயே ஆன்மீக நெஞ்சங்கள் ஏராளமாக உண்டே? தமிழக முதல்வர்மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். பத்திரிகை, மற்றும் தொலைகாட்சி ஊடகங்கள் இதனை முன்னின்று நடத்தித் தரவேண்டும். நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்று மகா பிரதோஷ தினம். " அருளாயே" என்று இத்தலப் பதிகத்தில் பாடல் தோறும் சம்பந்தர் வேண்டியது போல நாமும்,  நஞ்சை உண்டு எல்லா உலகங்களையும் காத்த நீலகண்டப் பெருமானிடம் வேண்டுவோம். இப்படிச் செய்யப்படும் பிரார்த்தனை கண்டிப்பாக வீண் போகாது.
                        "பொய்யிலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே" - சம்பந்தர்.  
http://www.nhai.asia/register/rgr/traffic.asp  என்ற முகவரியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்.

23 comments:

  1. Can you please give the NH highway number. This is required to register the complaint.

    ReplyDelete
  2. "Kumudam Jothidam" gives the NH number as 45 C

    ReplyDelete
  3. உங்களது இந்த ஆன்மீகப்பணிகள் மெமேலும் சிறக்க அந்த கூடல் பெருமான் ஆசிர்வாதிக்கட்டும்!

    ReplyDelete
  4. http://www.nhai.asia/register/rgr/traffic.asp

    we can't access the above link!! so pls mention the correct path

    ReplyDelete
    Replies
    1. Pl. click on the link given at the end of the post. It opens w/o any difficulty. Alternately, you may access their site by typing National Highways Authority of India in google. When the site opens, you need to look at right bottom of the page where complaints and suggestions are lodged. Thanks for your kind support.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Pl. enter the following:in Section B:: National HWY # 45 C.
    Nearest Place; Mundiyampakkam.
    Prominent Landmark: Famous pananggaattur Siva Temple.
    City: Villuppuram Dt.
    State : Tamilnadu.

    In section C :
    Complaint Category: 'Others'.
    Then skip to the complaints/suggestions box and type:
    "For the sake of broadening the highway into a 4-lane road, this prominent Hindu Siva Temple is in danger of being demolished, which should be STOPPED."

    Then submit. Dont forget to fill in your details in section A.
    Hope this helps.

    Om sivaya

    ReplyDelete
  7. முக்கிய செய்தி

    சு.சுவாமி மற்றும் அவரது சட்ட ஆலோசனைக் குழு மூலம் இந்த கோயிலின் பகுதியை இடிப்பதற்கு தடை வாங்கியாகிவிட்டது!

    நமச்சிவாய! முன்றைய தினமும் நேற்றும் தூக்க்கம் கெட்டது. ஒரு சில கடிதங்கள்,. ஓராயிரம் மக்கள் பிரார்த்தனை, சில நல்ல தொடர்புகளால் இது சாத்தியமானது. இத்தனை பேர் கவலை கொள்ளும் போது, கோயில்கள் பல இனி நிமிரும் என்ற நம்பிக்கை மலைபோல் வளர்ந்துவிட்டது!

    சந்திரா
    www.conserveheritage.org
    http://templesrevival.blogspot.com
    http://reachhistory.blogspot.com

    ReplyDelete
  8. Shame on the Indian government if a sacred temple has to be demolished to construct a highway. I thought the Indian government was bad! I feel ashamed of being born an Indian in a foreign land. This devistating news will be published in South africa. Long Live Sivapathasekaran! Thiagarajan, Durban, South Africa. Siva Siva

    ReplyDelete
  9. Shame on the Indian government if a sacred temple has to be demolished to construct a highway. I thought that the BRITISH were bad! I feel ashamed of being born an Indian in a foreign land. This devistating news will be published in South Africa. Long Live Sivapathasekaran! Thiagarajan, Durban, South Africa. Siva Siva

    ReplyDelete
  10. We have to struggle for retaining these temples. requesting Ms. Jayalalitha to assure this.

    ReplyDelete
  11. The very thought of wanting to demolish a temple is barbaric! Thiagarajan, South Africa. Siva Siva

    ReplyDelete
  12. Our temples can never be demolished. Siva's Grace will not allow something this drastic to happen, no matter how arrogant the people who are responsible for this can be.

    ReplyDelete
  13. Anonymous

    The government seems to put aside money for restoring temples and demolish whatever is incovienient. What a shame. If they had any sense they would make the state a tourist heaven. Only the Almighty can stop them. Lets put forward our intentions to the universe.

    ReplyDelete
  14. the word devastated nt enough to the describe the feeling about 1 of the most sacred yet beautiful temple thats gonna be demolished.its a shame for the indian government to even consider the fact of destroying a temple in need to build a highway.with Siva grace no such thing will happen.RONELLE HARTHEEM.SIVA SIVA

    ReplyDelete
  15. Overwhelmed to see the concern expressed. We understand that the locals and other devotees have appealed to the Dt collector and HR&CE dept to stop demolishing the Temple. On our part, we have sent mails to Chief Minister's cell, HR&CE ,TV, Newspapers and magazines besides lodging an online complaint to NHAI.

    ReplyDelete
  16. Sacred temples are symbols of civilisation. It is sad to see modern man behave so uncivilised!

    ReplyDelete
  17. Have the Gurumahasannidhanams of the Saiva Mutts (Madams)of Tamil Nadu taken action as yet? Or is everyday Thursday for them to be in Mownam (silence)for so long? Kindly inform us of their actions. Let us remember Thirunaavukkarasar Naayanaar who went on a fast until He had the dharshan of the Lord of Thiru Pazhaiyaarrai Vadadhalli, which was hidden by the Jains during His time. We dont expect them to go to that extent, but we are waiting for our Gurus to open their mouths.

    ReplyDelete
  18. உங்களது இந்த ஆன்மீகப்பணிகள் மெமேலும் சிறக்க அந்த கூடல் பெருமான் ஆசிர்வாதிக்கட்டும்!

    I re-posted this Article at: http://spiritualaffairs.blogspot.in/2012/07/blog-post_18.html

    ReplyDelete
  19. உங்களது இந்த ஆன்மீகப்பணிகள் மெமேலும் சிறக்க அந்த கூடல் பெருமான் ஆசிர்வாதிக்கட்டும்!

    I re-posted this Article at: http://spiritualaffairs.blogspot.in/2012/07/blog-post_18.html

    ReplyDelete
  20. 1000 aandugal palamayana kovilin pakuthiyai idikum ennam evaru uthithathu...ithu indukal vetkapada vendiya seithi..indukalin samaya patril otrumai illathathaiye katukindrathu...ayya thangalai pondror ungal valaipathivinal theriyapadithiyatharku nandri..pottal kaadugal pala irukum pothu kovilai idithi kondu road pottal than mudiyuma...vetkangetta india arasangam oolal paervaligal aalum intha naadu urupadiyanathai seiya mudiya vitalum kaalam kaalamaga irukum nallavatrai kedukamal irundhal nalathu...nhai in indha ennathaiye kadumaiyaga ethirkiren.

    ReplyDelete
  21. temples are the monuments of our country. non-workshipped lane in sea in india srilanka border case in supreme court for SETHU SAMUTRA PROJECT. why you make another problem towards this temple. make some idea to avoid this project to bye pass road. please avoid and save our ancient temples.

    if you do if it is a muslim or christian temples?

    இந்திய நாட்டில் இந்து கோயிலைக் காப்பாற்றாதவன் அதிகாரியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் யோசிக்க வேண்டாமா?

    ReplyDelete
  22. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளவரை மட்டும் தான் சகோதுரவத்துவம் பற்றி பேசப்படும். ஏழை இந்துகளுக்கு பணம் கொடுத்து மதம் மாற்றுதல் , காதல் என்ற பெயரில் இந்து பெண்களை திருமணம் செய்து மதம் மாற்றுதல் போன்ற வேலைகள் வேகமாக நடந்து வருகின்றது இந்த நிலை நீடித்தால் இன்று சாப்பிட கூட நேரம் இல்லாமல் உங்கள் வரும் காலத்திற்கு (பிள்ளைகளுக்கு) பணம்,பொருள் சேர்த்து வைக்கும் உங்களால்(அவர்களால் கூட) அதை அனுபவிக்க முடியாது.இது ஆண்டவன் மீது ஆணை
    இது எச்சரிக்கை மட்டுமே

    ReplyDelete