விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய் விரி
பண்ணமர்ந்து ஒலி சேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடைக்
கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே.
--திருஞானசம்பந்தர் தேவாரம்
தன்னிடம் அடைக்கலமாக வந்த புறாவுக்காகத் தன் சதையையே அறுத்துத் தராசில் இட்ட சிபிச் சக்கரவர்த்தியின் கதை எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு போட்டாலும் தராசு நேராக நிற்காததால் தனது கண்ணையே பறித்து இட முற்படும்போது, பரமேச்வரன் பிரத்யக்ஷமாகி அவனுக்கு அருளிய ஊருக்குப் புறவார் பனங்காட்டூர் என்று பெயர் வந்தது. அதனால் சுவாமிக்கும் நேத்திரோத் தாரகேச்வரர் என்று பெயர். சூரியன் இங்கு பூஜித்ததால் அவனது கதிர்கள், சித்தரை முதல் நாள் துவங்கி ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சுவாமியின் மீதும் பிறகு சத்தியாம்பிகையின் மீதும் விழுகின்றன. ஊரே பனங்காடாக இருந்ததால் பனங்காட்டூர் எனப்பட்டது. கோயிலுக்குள் ஸ்தல விருக்ஷமாக இரண்டு பனைமரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். தற்போது இவ்வூர்,பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இது, நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தரின் ஒரு பதிகம் இதற்கு உண்டு. ஒவ்வொரு பாடலும், "அருளாயே" என்று முடியும்.
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசீய நெடுஞ்சாலையிலிருந்து முண்டியம்பாக்கம் அருகில், பண்ருட்டி செல்லும் சாலை பிரிகிறது. திருச்சி செல்லும் சாலையைப்போலவே இதையும் நால் வழிச் சாலையாக மாற்றுவதற்கு தேசீய நெடுஞ்சாலைத்துறை முன்வந்துள்ளது. குண்டும் குழியுமாக இருந்த இந்தச் சாலைக்கு ஒரு வழியாக விமோசனம் வந்தது என்று ஆறுதல் அடையும்போது, கூடவே ஒரு அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. இந்தச் சாலை, பனையபுரம் வழியாகச் செல்வதால், அங்குள்ள பாடல் பெற்றதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதுமான பனங் காட்டீசனின் கோயிலை இடிக்க முன்வந்துள்ளது தேசீய நெடுஞ்சாலைத் துறை. இத்தகவல், செய்தித்தாள்களில் வெளி வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இத்தகவல், மார்ச் முப்பதாம் தேதியிட்ட குமுதம் ஜோதிடம் இதழில் வெளிவந்துள்ளதை அன்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டவுடன், துக்கமும் அதிர்ச்சியும் மேலிட்டது. நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டாகி விட்டது. அதற்கு மேல் என்ன செய்யலாம்? சுவாமி பார்த்துக்கொள்வார் என்று, சிவனே என்று இருந்து விடலாமா? பூஜை முடிவில் அந்த ஊர்ப் பதிகத்தையும் பாராயணம் செய்தாகிவிட்டது. மனதில் சலனம் இன்னமும் நிற்கவில்லை. நேரில் சென்று ஸ்வாமியிடமே ப்ரார்த்தித்துக்கொண்டு வரலாமா?
இணைய தளத்தின் மூலம் நேஷனல் ஹைவேய்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா வில் எதிர்ப்பைப் பதிவு செய்து, இம்முடிவை உடனடியாகத் தள்ளுபடி செய்து, வேறு வழியாக, கோவிலைப் பாதிக்காத படி, மாற்றுப்பாதை அமைக்க விண்ணப்பித்துள்ளேன். இதேபோன்று அந்த இணைய தளத்தில் ஏராளமானோர் எதிர்ப்பைப் பதிவுசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசின் இந்து அற நிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள கோயில் இது. எனவே, அறநிலையத்துறை கமிஷனருக்கும் தந்தி கொடுக்கும்படி, திரு ஏ எம் ஆர் அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருக்கிறார்கள். அந்த கிராமத்து மக்களும் ஒன்று திரண்டு இவ்வாறு இடிப்பதை எதிர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.
சமய உலகம் ஒன்று படவேண்டிய தருணம் இது. ஏதோ ஒரு கிராமத்துக் கோயில் தானே என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டியபோது , திருவெண்பாக்கம் என்ற பாடல் பெற்ற சிவாலயத்தை இடித்தார்கள். லோயர் அணைக்கட்டு கட்டக் கருங்கல் தேவைப் பட்டபோது, கங்கைகொண்ட சோழபுரக் கோயிலின் கோபுரத்தை இடித்து அக்கற்களைப் பயன் படுத்தினர் என்பர். நாம் மௌனிகளாக இருக்கும் வரையில் இப்படித்தான் ஒவ்வொரு கோயிலாக இழக்க நேரிடும். இதே, வேற்று மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தால் இடிக்கும் துணிவு அரசாங்கத்திற்கு உண்டா?
மதத்தின் காவலர்களாகக் கருதப்படும் மடாதிபதிகள் இச்செயலைக் கண்டிப்பதோடு, இதற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஆன்மீகப் பற்றுள்ள வழக்கறிஞர்கள் இதற்கு ஆவன செய்ய முன்வரவேண்டும். இவ்வளவு ஏன்? அரசியலிலேயே ஆன்மீக நெஞ்சங்கள் ஏராளமாக உண்டே? தமிழக முதல்வர்மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். பத்திரிகை, மற்றும் தொலைகாட்சி ஊடகங்கள் இதனை முன்னின்று நடத்தித் தரவேண்டும். நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இன்று மகா பிரதோஷ தினம். " அருளாயே" என்று இத்தலப் பதிகத்தில் பாடல் தோறும் சம்பந்தர் வேண்டியது போல நாமும், நஞ்சை உண்டு எல்லா உலகங்களையும் காத்த நீலகண்டப் பெருமானிடம் வேண்டுவோம். இப்படிச் செய்யப்படும் பிரார்த்தனை கண்டிப்பாக வீண் போகாது.
"பொய்யிலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே" - சம்பந்தர்.
http://www.nhai.asia/register/rgr/traffic.asp என்ற முகவரியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்.