திருச்சோற்றுத்துறையில் மக்களின் ஈடுபாடு |
நன்றி : வலைத்தளப்படம் |
நன்றி : வலைத்தளப் படம் |
குருபீடங்களுக்குத் தெரியாததல்ல. அவர்களைக் குறை கூற நாம் யார் ? அறுபது ஆண்டுகளாகத் திருப்பணி செய்யவில்லையே என்ற ஏக்கமே மக்களை இவ்வாறு வேதனைப் படச் செய்கிறது. பிழையானால் பொறுப்பர் என நம்புகிறோம்.
உள்ளூர்க் காரர்களுக்கு மட்டும் நம்முடைய கோயில் என்ற உணர்வு இருந்தால் இந்நிலை ஏற்படுமா? நமக்கென்ன என்றல்லவா இருக்கிறார்கள் ! இதைத்தான் பிற மதத்தவர்கள் பயன் படுத்திக் கொள்கின்றனர். " அரன் பொற்கழல் உள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர் நள்ளிருப்பர் நரகக் குழியிலே " என்றார் அப்பர் சுவாமிகள். நம் ஊர்க் கோயில் மரம் முளைக்கலாமா என்று கவலைப் படுவோர் சிலரே. மரத்தை அகற்றுவதையும் வெளியூர்க் காரர்களே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா ? திருப்பணி, கும்பாபிஷேகம் ஆகிய எல்லாவற்றையும் வெளியூர்க் காரர்கள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கும் ஊர்கள் ஏராளம்.
உள்ளூர்க்காரர்களுக்குத் தங்கள் கோயில் மீது அக்கறை இல்லாமல் போகலாமா ? கும்பாபிஷேகம் ஆன பிறகாவது தினமும் கோயிலுக்கு வந்து, நித்திய பூஜைகள் நடை பெறச் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லையே .
உள்ளூர்க் காரர்களுக்கு உணர்ச்சி ஏற்பட வேண்டியது மிகவும் முக்கியம். தட்டிக் கேட்க ஆளில்லாததால் ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு முற்றோதுதல் செய்தால் மட்டும் போதுமா ? களப்பணி ஆற்றினாலே இதுபோன்ற கைவிடப்பட்ட கோயில்களைக் காப்பாற்ற முடியும். அடியார் கூட்டங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளூர்க் கார்களை நல்வழிப் படுத்த வேண்டும். அவ்வாறு நல்வழிப் படுத்த வேண்டியவர்கள் பாராமுகமாய் இருப்பதால் அப்பொறுப்பைப் பொது மக்களே ஏற்க வேண்டி உள்ளது.
விதி விலக்காகச் சில ஊர்களில் உள்ளூர் மக்கள் முழுமையாகத் தங்களை ஆலயத்தோடு இணைத்துக் கொண்டிருப்பது நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் அற நிலையத் துறையின் தயவை எதிர் பார்ப்பதில்லை. கோயிலைப் பளிச்சென்று வைத்துக் கொண்டு தொண்டு ஆற்றுகிறார்கள்.
மார்கழி வைகறையில் பாவைப் பாடல்கள் மங்கள ஜோதியுடன் |